ETV Bharat / bharat

கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவியை தாக்கிய கும்பல் - கேரளாவில் கல்லூரி மாணவி மீது தாக்குதல்

கேரளாவில் கல்லூரி மாணவியையும் அவரது நண்பரையும் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவியை தாக்கிய கும்பல்

author img

By

Published : Nov 29, 2022, 10:17 PM IST

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியையும் அவரது நண்பரையும் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிரிவு 354 (வன்கொடுமை) மற்றும் பிரிவு 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் கோட்டயம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், கோட்டயம் ரயில் நிலையம் அருகே உள்ள உணவகத்திற்கு அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது வெளியே நின்றுகொண்டிருந்த 3 இளைஞர்கள் மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இதனால் இவர்களுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்த கும்பல் இவர்கள் இருவரையும் நடுரோட்டில் வைத்து தாக்கியது. இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடரந்து உள்ளூர் வாசிகள் இருவரையும் அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். இதனிடையே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்றிரவு (நவம்பர் 28) நடந்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை கூட்டுப்பாலியல் செய்த சக மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.