குஜராத் மாநிலம் கல்யாண்புராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் பாய்ந்தது.
அதனால் அங்கு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் சம்பயிடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த ராதாபூர் காவல்துறையினர், சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், "உயிரிழந்த விவாசாயிகள் அதே பகுதியைச் சேர்ந்த தனபாய் தாகூர் (30), பிரபு தாகூர்(35), நாப் தாக்கூர்(40) என்பதும், விபத்து ஏற்படுத்திய கார் குட்ச் பகுதியிலிருந்து பலன்பூர் நோக்கி புறப்பட்டதும்" தெரியவந்தது.
இதையும் படிங்க: மீன்பாடி வண்டி மீது மினிலாரி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!