பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜனவரி 12 ஆம் தேதி நான்கு குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதையடுத்து, குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால், நான்கு குழந்தைகளும் ராமதுர்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மூன்று குழந்தைகள் உயிரிழந்தன. இதுகுறித்து மருத்துவர்கள், முதல்கட்ட ஆய்வில் தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் குழந்தைகளின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ளன.
இதன்முடிவுகளும், குழந்தைகளின் உடற்கூராய்வு முடிவுகளும் கிடைத்த உடன் துல்லியமான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதே நேரத்தில், இதுகுறித்து பெற்றோர்கள் அச்சமடைய வேண்டாம். நோய்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா