கொல்கத்தா: நதியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் நேற்று (டிச.1) இரவு உள்ளூர் புது மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றார். வங்கதேசத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் தன்னை மார்க்விஸ் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரிடம் அப்பெண் புகார் அளித்தார்.
மார்க்கெட் காவல் நிலைய மகளிர் போலீசாருடன் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்ற தனிப்படையினர், குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் கைது செய்தனர். இதனை கொல்கத்தா டிசி சென்ட்ரல் ரூபேஷ் குமார் கூறினார்.
ஹோட்டலின் மேலாளரும் கைது செய்யப்பட்டார். ஹோட்டலின் சிசிடிவி காட்சி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. புகார் கொடுத்த பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: உ.பியில் காதலுக்காக மதம் மாறிய முஸ்லீம் பெண்கள்!