ETV Bharat / bharat

டார்க் இணையதளத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞர்கள்

author img

By

Published : Mar 14, 2021, 4:44 PM IST

குஜராத்தில் இளைஞர்கள் மூன்று பேர் வெளிநாட்டு வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை டார்க் இணையதளம் மூலம் எடுத்து, இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை வாங்கியுள்ளனர்.

Three arrested  for Spending  2 Crore using stolen bank cards

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் ஹர்ஷ்வர்தன் பர்மர், கல்பேஷ் சிங்கா, மோகித் லால்வானி . இவர்களில் பர்மர் ஆன்லைன் மூலம் 70 லட்ச ரூபாய்க்கும், சிங்கா 70 லட்ச ரூபாய்க்கும், லால்வானி 60 லட்ச ரூபாய்க்கும் தங்க காசுகள், விலை உயர்ந்த செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். இவை அனைத்திற்கும் வெளிநாட்டு வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.

இதையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், பர்மருக்கு கராச்சியைச் சேர்ந்த ஜியா முஸ்தபா, சதாம் ஆகியவர்களுடன் டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளதும், அவர்களின் உதவியுடன் டார்க் இணையதளம் மூலம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் அதன் பாஸ்வேர்டுகளையும் பதிவிறக்கம் செய்துள்ளதும் தெரியவந்தது.

இதனைக் கொண்டு பிட்காயின் உள்ளிட்ட பல மோசடி வேலையில் ஈடுபட்டனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களை நம்பிக்கை துரோகம், மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.