மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து புனே போலீசார் தரப்பில், இந்த சம்பவம் நேற்று முன்தினம் (அக் 13) நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டிற்கு நண்பர்களை பார்ட்டிக்காக அழைத்துள்ளார்.
ஒரு பெண் உள்பட 3 ஆண்கள் வந்துள்ளனர். அப்போது மயக்க மருந்து கொடுத்து அவரை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் மதியம் தான் அவருக்கு சுயநினைவு எட்டியுள்ளது. உடனே எங்களிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், ராகேஷ் சதிஷ் யாதவ்(32), முகமது சனாவஜ்ஜுதின் சர்வாஉத்தின்(30), முகமது சரிஃப்னவாஜ் சர்வாருத்தின்(28) ஆகியோரை கைது செய்தோம் எனத் தெரிவிக்கப்பட்டது.