ETV Bharat / bharat

'நியூஸ்க்ளிக்' வழக்கு; விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாத ஆட்சியாளர்களால் பத்திரிக்கைத்துறைக்கு அச்சுறுத்தல் - நியூஸ்க்ளிக்

Newsclick Arrests: 'நியூஸ்க்ளிக்' செய்தி நிறுவனத்தின் நிறுவனர், பிரபீர் புர்கயஸ்தா மற்றும் இந்நிறுவனத்தின் மனிதவள மேலாளர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை கைது செய்த டெல்லி போலீசாரின் நடவடிக்கை, பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எழுந்த அச்சுறுத்தல் என ஈநாடு பத்திரிகையின் தலையங்கத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தலையங்கத்தின் தமிழாக்கத்தைக் காணலாம்.

Newsclick Arrests
நியூஸ்க்ளிக்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:08 PM IST

Updated : Oct 9, 2023, 4:04 PM IST

ஹைதராபாத்(தெலங்கானா): உண்மையை உரக்கச் சொல்வதில் செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்களின் பங்கு மகத்தானது. அரசின் நடவடிக்கைகள், அவற்றின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை விளக்குவதன் மூலம் ஒரு செழுமையான ஜனநாயகத்தை சுதந்திரமான ஊடகங்கள் உயிர்ப்புடன் வைத்துள்ளன. 'மீடியா ஒன்' என்ற மலையாள செய்தி சேனலுக்கு மத்திய அரசு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் நீக்கியது. போதிய ஆதாரங்கள் இன்றி தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் உரிமைகளை நசுக்கக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தது. இருப்பினும், பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான சில முற்றுகைகள் ஏதேவொரு வகையில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இதற்கு சான்றாக சமீபத்தில் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.

டெல்லியுள்ள 'நியூஸ்க்ளிக்' என்ற செய்தி இணையதளத்தின் அலுவலகங்கள் மற்றும் அதன் பத்திரிக்கையாளர்களின் வீடுகளில் கடந்த 3ஆம் தேதி டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிறுவன ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா (76) மற்றும் மனிதவள அமைப்பின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு முதல் விமர்சனங்களை வெளியிடும் இப்பத்திரிக்கை அலுவலகத்தின் பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, விதிமுறைகள் மீறல் என அலுவலகத்திற்கும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டது.

விமர்சனங்களுக்கு முன்னுரிமை தரும் உன்னத நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த 'நியூஸ்க்ளிக்' நிறுவனம், ஆளும் நிர்வாகத்திற்கு எதிராக வைக்கும் விமர்சனங்களால் அவர்களுக்கு இடையூறாக இருந்துவந்ததாக கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்களின் தொகுப்பு குறித்த செய்திகளும் இதில் அடங்கும். இதனிடையே, பத்திரிக்கை சுதந்திரம் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, 'தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் குறைபாடுகளை ஒரே மாதிரியாக வெளிப்படுத்துவதற்கு ஒரு சக்திவாய்ந்த கருவி 'பத்திரிகை'யாகும் எனவும், தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 'ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு தணிக்கை செய்யப்பட்டால், உண்மை மறைக்கப்பட்டு, ஜனநாயகத்தின் மாண்புக்கு களங்கம் ஏற்படும்' எனவும் குறிப்பிட்டிருந்தனர். இவ்வேளையில், சமீபத்தில் 'நியூஸ்கிளிக்' நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக டெல்லி போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், பத்திரிகைகளின் அடிப்படை சுதந்திரத்தின் மீதான கடுமையான அத்துமீறலைப் பிரதிபலிக்கிறது.

'நியூஸ்க்ளிக்' செய்தி நிறுவனத்தின் மீதான இந்த நடவடிக்கை பிற ஊடகங்களுக்கும் இதேபோன்ற அச்சுறுத்தல் தரும் நடவடிக்கையாக அமையக்கூடும். 2 ஆண்டுகளுக்கு முன்பு, அமலாக்கத்துறை(ED), வருமான வரித்துறை மற்றும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள், இதே 'நியூஸ்கிளிக்' ஊழியர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பணமோசடி என சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது பல மடிக்கணினிகள், தொலைபேசிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டத்தோடு, நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகள் போன்றவற்றின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க: நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தா கைது!

இந்தியாவில் சீனா சார்பு நடவடிக்கைகளுக்காக, இந்நிறுவனம் சீனாவிடம் இருந்து நிதி பெறுவதாக குற்றம்சாட்டிய டெல்லி போலீசார், நியூஸ்கிளிக்' செய்தி நிறுவனம் மீது கடுமையான 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்' (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தது. முன்னதாக, குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதனால், அரசாங்கம் ஊடகங்களின் விமர்சனத்தை ஒரு தேசத்துரோக செயலாகவும், தேச விரோதப் பிரச்சாரமாகவும் கருதுவதாகவும், இது அரசு தனக்கெதிரான எதிர் குரல்களை தேடிக் குறிவைக்க வழிவகுப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இதனிடையே, 2021 ஆம் ஆண்டில், 'நியூஸ் கிளிக்' மற்றும் அதன் ஆசிரியர்களான பிரபீர் புர்காயஸ்தாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தலையிட்டு, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த எஃப்ஐஆர் (FIR) -ன் நகலையும் வெளியிட அமலாக்கத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டியது இவ்விவகாரத்தில் உள்ள வெளிப்படைத்தன்மையின்மையை காட்டியது. இதையடுத்து பல பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்திய தலைமை நீதிபதிக்கு (CJI), மனு ஒன்றை அளித்தனர். அதில், 'ஊடகங்களை பயங்கரவாதம் என்று முத்திரை குத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும், புலனாய்வு அமைப்புகளை பத்திரிகையாளர்களுக்கு எதிரான ஆயுதங்களாக தவறாக பயன்படுத்துவதையும்' குறித்து மனுவாக விளக்கப்பட்டது. மேலும், பல ஊடகவியலாளர்கள் தற்போது பழிவாங்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதால் பத்திரிக்கைகளின் சுதந்திரம் பாதிக்கும் அபாயத்தில் உள்ளது.

ஒரு ஜனநாயகத்தில், நிலவும் பல கருத்து வேறுபாடுகளின் சகிப்புத்தன்மையும், மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்பளிப்பதுமே ஒரு நல்ல ஆட்சிக்கு உதாரணமாகும். ஆனால், ஆளும் அரசுகள் எழும் விமர்சனங்களை எதிர்கொண்டு பதிலளிப்பதற்கு மாறாக, அவற்றை கட்டுப்படுத்துவதை மட்டுமே செய்கின்றன. இதனால், பததிரிக்கை சுதந்திரத்தின் மாண்பு அடிப்படையிலேயே குறைந்து கேள்விக்குறியாகிறது. பொதுமக்களின் சுதந்திரம், புலனாய்வு அமைப்புகளை தங்களுக்காக ஆயுதங்களாக்கி சுதந்திரத்தை பறிக்கும் செயலலில் ஈடுபடுகின்றனர். இது சுதந்திரத்தின் மாண்பை இறுக்குவதோடு, சமூகத்தின் இதயத்துடிப்பாக இருக்கும் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

"பத்திரிகை சுதந்திரம் உண்மையிலேயே மதிக்கப்படும் போது, ​​பத்திரிகைகள் எதையும் கடுமையாகப் பயன்படுத்தி, கருத்து தெரிவிக்க முடியும்" என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இவர் வாழ்ந்து மறைந்த இந்தியாவில், கடினமான கேள்விகளுக்கு வெட்கப்படுவர்கள் சிறந்த தலைவர்களாகப் போற்றப்படுகின்ற ஒரு குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது. கருத்து வேறுபாடுகள் மற்றும் பல தரப்பட்ட கண்ணோட்டங்களை ஏற்க மறுக்கும், அதிகாரம் படைத்த சிலர், பொதுவான பிரச்சனைகளில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சவால்களை எழுப்பும் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களை தங்களது எதிரிகளாக எண்ணி இது போன்ற நடவடிக்கைகளை நடத்துகின்றனர். இதேபோல, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, இரண்டு ஊடகங்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை முன்வைத்து இதேபோன்ற, உத்தியை கையாண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2014 முதல் 2019 வரை, நாடெங்கும் இருநூறுக்கும் அதிமான பத்திரிக்கையாளர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 40 பத்திரிக்கையாளர்கள் வரை பரிதாபமாக தங்களது இன்னுயிரை இழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பத்திரிக்கைகள் வைக்கும் விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களை கொண்ட நமது இந்தியா, உலகளாவிய பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில், இந்தியா 180 நாடுகளில் 133 வது இடத்தில் இருந்த நிலையில், சமீபத்தில் 161வது இடத்திற்கும் சரிந்துள்ளது, மிகவும் வேதனை தருகிறது. இதற்கு முற்றிலும் மாறாக நார்வே, அயர்லாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் சுதந்திரமான பத்திரிகையை தீவிரமாக வளர்ப்பதன் மூலம் சுதந்திரமான பத்திரிகை கொள்கைகளை நிலைநிறுத்துகின்றன.

ஜனநாயகத்தில் அச்சமற்ற குரல்களை நசுக்குவதற்காக, பத்திரிக்கையாளர்கள் மீதான பல தாக்குதல்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை சர்வதேச அரங்கில் ஊமையாகவே வைத்துள்ளது. சர்வதிகார ஆதிக்கத்தின் தூண்டுதல்களின் விளைவாக அரங்கேற்றப்படும் இத்தகைய அத்துமீறல்கள், பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்துவத்தோடு, முடிவில் பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையிலும் பெரும் துன்பங்களை ஏற்படுத்தும் என 'ஈநாடு' தலையங்கம் (Eenadu Editorial) கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு! நாடாளுமன்றத் தேர்தல் யுக்தியா? காங்கிரஸ் போடும் திட்டம் என்ன?

Last Updated : Oct 9, 2023, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.