அமெரிக்க மூத்த அலுவலர் ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தியாவில் அமெரிக்க பணியகம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முடிந்தவரை அதிகமான மாணவர்களுக்கு விசா விண்ணப்பதாரர்களுக்கு இடமளிக்கத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது என்றும், அவர்களின் முறையான பயணத்தை எளிதாக்குவது-அதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.
"ஜூன் 14 முதல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விசா நியமனங்களைப் பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான விசா நியமனங்கள் இருக்கின்றன; வரும் வாரங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு விசா நியமனங்கள் வழங்கப்படும்" என்று அமெரிக்க தூதரகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
"நீங்கள் சந்தித்த தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றுகிறோம், உங்கள் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தில் உள்ள தூதரக விவகாரங்களுக்கான அமைச்சர் ஆலோசகர் டான் ஹெஃப்லின், அமெரிக்காவிற்குச் செல்லும் மாணவர்கள் நாட்டிற்குள் நுழைய கோவிட் -19 தடுப்பூசி போட்டதற்கான எந்தச் சான்றும் தேவையில்லை என்று முன்னர் கூறியிருந்தார்.
![ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு விசா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12148494_751_12148494_1623809654371.png)
தற்போது மாணவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட்-19 சோதனையின் கரோனா இல்லை என்ற அறிக்கை அவர்களுக்குத் தேவைப்படும்.
கரோனா தொற்றுநோயால் விசா நியமனங்கள் பெறுவதில் சில கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு உயர் படிப்புகளுக்காக அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்களில் கணிசமான எண்ணிக்கையில் கவலை அதிகரித்துவருகிறது.