ETV Bharat / bharat

Sani Peyarchi 2023:சனிப்பெயர்ச்சி 2023 எப்போது? குழப்பத்தில் பக்தர்கள்; திருநள்ளாறு கோயிலின் முடிவு - சனிப்பெயர்ச்சி 2023 எப்போது குழப்பத்தில் பக்தர்கள்

Sani Peyarchi 2023: இந்தாண்டு சனிப்பெயர்ச்சி எப்போது என பக்தர்களிடையே எழுந்த குழப்பத்திற்கு, திருநள்ளாறு சனிபகவான் கோயில் நிர்வாகம் முடிவு கொண்டுவரும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 16, 2023, 7:11 PM IST

Thirunallar Saneeswaran Temple: கல்வி, செல்வம், மனக்கவலை, குடும்பத்தில் குழப்பம், பணியிடத்தில் தொந்தரவு என்பன உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நமது வீட்டிலும் சரி, வெளியே செல்லும் இடங்களிலும் சரி பெரியவர்கள் நமக்கு சொல்வது உனக்கு நேரம் சரியில்லை. இப்படி நமக்கு வாழ்க்கையில் நடக்கும் தீமைகளுக்கும் நன்மைகளுக்கும் மிக முக்கிய காரணமாக அனைவராலும் கூறப்படுவர் தான், சனி பகவான். இத்தகைய அதிக பலம் பொருந்தியவராகக் கருதப்படும் இவர் நவக்கிரகங்களில் வீற்றிருப்பார். பெரும்பான்மையாக கோயில்களில் நவக்கிரகங்களில் இவருக்கு மட்டும் பக்தர்கள் மத்தியில் தனிக் கவனம் உண்டு எனலாம்.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற இவருக்கு மட்டுமே நவக்கிரகங்களில் 'ஈஸ்வரர் பட்டம்' உண்டு. இத்தகையவருக்கு புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே உலகப்புகழ் பெற்ற 'திருநள்ளாறு சனிபகவான் கோயில்' (Thirunallar Saneeswaran Temple) உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சனிப்பெயர்ச்சியின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதோடு பரிகாரங்கள் செய்வதும் வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு சனிப்பெயர்ச்சி (Sani Peyarchi 2023) வரும் ஜன.17 (நாளை) நடக்கும் எனவும்; சிலரோ மார்ச் மாதத்தில் நடக்கும் எனவும்; மற்றும் சிலரோ வேறு ஏதோ பஞ்சாங்க முறைப்படி வேறொரு நாளில் நடக்க உள்ளதாகவும் கூறி வருவதால் பக்தர்களிடையே கடும் குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இதனைத் தவிர்க்கும் விதமாக திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், 'திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கிய பஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற 2023 டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அப்போது தான், சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று (ஜன.15) கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் மூத்த சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் சனீஸ்வரர் சந்நிதி முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால், பக்தர்களின் குழப்பம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது எனலாம்.

இதையும் படிங்க: தாமதமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை... ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.