ETV Bharat / bharat

'முடியவில்லை, ஆனால் குறைந்துவருகிறது' - கரோனா மூன்றாவது அலை குறித்து டெல்லி அமைச்சர்

டெல்லியில் கரோனா பரவலின் மூன்றாவது அலை முற்றிலுமாக முடியவில்லை என்றாலும் தொடர்ந்து குறைந்துவருவதாக அம்மாநிலத்தில் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Satyendar Jain
Satyendar Jain
author img

By

Published : Dec 11, 2020, 4:22 AM IST

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரவல் தொடர்ந்து குறைந்துவருகிறது. இருப்பினும், டெல்லியில் கரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் புதன்கிழமை(டிச.09) 2,463 பேருக்கு கரோனா உறுதி செயய்ப்பட்டது, மேலும் 50 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் உறுதி செய்யப்படும் மிக குறைந்த அளவு கரோனா வழக்குகள் இதுவாகும்.

அதேபோல சோதனை செய்பவர்களில் கரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் 3.42 விழுக்காடாக குறைந்துள்ளது. இது குறித்து டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது ட்விட்டரில், "கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் தேசிய தலைநகர் வெற்றியை நோக்கி நகர்ந்துவருகிறது" என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "கரோனா வழக்குகளும், உயிரிழப்புகளும் கடந்த 40 நாள்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது இருக்கும் நிலைமை மேம்பட்டுள்ளது. டெல்லியில் கரோனா பரவலின் மூன்றாவது அலை முற்றிலுமாக முடியவில்லை என்றாலும் தொடர்ந்து குறைந்துவருகிறது" என்றார்.

கரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்துப் பேசிய அவர், "முதலில் சுகாதார உழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்படும். அதைத்தொடர்ந்து வயதானவர்களுக்கு வழங்கப்படும்.

போதிய அளவில் தடுப்பு மருந்து எங்களுக்கு கிடைத்தால், ஒட்டுமொத்த டெல்லிக்கும் ஒரே வாரத்தில் தடுப்பு மருந்தை எங்களால் அளிக்க முடியும். இதற்காக நாங்கள் தயாராகவே உள்ளோம். இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பு மருந்திற்கு பதிவு செய்துள்ளனர்" எனக் கூறினார்.

மேலும், டெல்லியில் கரோனா சிகிச்சைக்காக 13 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், கூடுதலாக 2,500 ஐசியு படுக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுகக்கு எதிராக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.