உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஆவாத் கிராசிங்கில், கார் ஓட்டுநரை, இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் ஒருவர் சிக்னலில் சாலையை கடந்து செல்லும்போது அவர் அருகே வரும் கார் ஒன்று சிக்னலில் நிற்கிறது. உடனடியாக, இளம்பெண் கார் ஓட்டி வந்தவரை சரமாரியாக தாக்குகிறார்.கார் தன் மீது மோதி விட்டதாக கூறி ஓட்டுநரை, அப்பெண் தாக்கியதாக கூறப்படுகிறது.
![lucknow](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/up-luc-02-krishnanagar-police-7209868_02082021130521_0208f_1627889721_462.jpg)
தாக்குதல்
அங்கிருந்த போக்குவரத்து காவலர், இளம்பெண்னை தடுக்க முயன்ற போதும் கண்டு கொள்ளாத அப்பெண், ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்குகிறார். கார் ஓட்டுநர், செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார். அப்பெண் ஒருபடி மேல் சென்று, ஓட்டுநரின் செல்போனையும் தூக்கி வீசி உடைக்கிறார்.அருகிலிருந்தவர்கள் தலையிட்டதையடுத்து, அப்பெண் அடிப்பதை நிறுத்துகிறார்.
தொடர்ச்சியாக அப்பெண் அடித்தும் அமைதியாக இருந்த கார் ஓட்டுநர் மீது போக்குவரத்து காவலர் வழக்குப்பதிவு செய்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் மீது காரை இடித்ததாக, அப்பெண் கூறி வந்த நிலையில், அப்படி நடக்கவில்லை என ஒரு சிலர் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
ArrestLucknowGirl ஹேஷ்டேக் ட்ரெண்ட்
அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி கார் ஓட்டுநர் மீது தவறில்லை என்பது தெரியவருகிறது. வீடியோவை பகிரும் பலரும், அப்பெண் கிராஸ் செய்வதைப் பார்த்ததும், ஓட்டுநர் காலை நிறுத்தி விடுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் தேவையில்லாமல் ஓட்டுநரை தாக்கியுள்ளார்.
அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, தாக்குதல் நடத்திய இளம்பெண்ணை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது. இதை வலியுறுத்தும் விதமாக #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: என்னது டீசல் வருதா.... கேன்களுடன் ஓடிய மக்கள்