முசோரி: உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஹுசைங்கஞ்சில் காவல் துறை ஆணையரின் சகோதரர் மற்றும் அவரது நண்பரான லெப்டினன்ட் கர்னல் ஆகியோரின் கார்களின் கண்ணாடிகளை உடைத்து, அதிலிருந்த பொருட்களைத் திருடர்கள் திருடியுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் காரில் இருந்த விலையுயர்ந்த கேமராக்கள், மடிக்கணினிகள் மற்றும் ஏனைய பொருட்களைத் திருடர்கள் எடுத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் முசோரியில் சில காலமாக திருட்டுச் சம்பவம் அதிகரித்து வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதற்கு அந்தப் பகுதி காவல் நிலையத்தில் காவல்துறையினர் பற்றாக்குறை தான் காரணம் எனவும், பல பகுதிகளில் தெருவிளக்குகள், சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
காவலர் மற்றும் ராணுவத்தினருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன ஆவது, ஆகையால் இப்பகுதியில் விரைந்து காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இணையத்தொடர் என்ற பேரில் ஆபாசப் படம் எடுத்த கும்பல் - ஒருவர் கைது!