திருவனந்தபுரம்: விமானத்தில் வந்து கொள்ளை அடித்துச் செல்வதை வாழக்கமாக கொண்டு இருந்த ஹைகிளாஸ் திருடனை கேரள போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் சம்பதி உமா பிரசாத். 23 வயதான உமா பிரசாத் தன் பதின்ம பருவ வயது முதலே எவரஸ்ட் மலையேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டவராக காணப்படுகிறார். மலையேற்று வீரராக மாற வேண்டிய உமா பிரசாத்தின் வாழ்க்கை தடம்மாறி கொள்ளையராக மாறியது ஆதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்மம் மாவட்டத்தை சேர்ந்த உமா பிரசாத், விமானம் மூலம் கேரளவுக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்து உள்ளார். ஹைகிளாஸ் திருடன் போல் தன்னை காட்டிக் கொண்ட உமா பிரசாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களை நோட்டமிட்டு கொள்ளை அடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்து உள்ளார்.
மேலும் கொள்ளையடித்த கையோடு லாட்ஜில் அறை எடுத்து தங்கும் உமா பிரசாத், பின்னர் விமானம் மூலம் தன் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்து உள்ளார். பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய உமா பிரசாத்தை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்து உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள பேட்ட பகுதிக்கு அண்மையில் கொள்ளை அடிக்க வந்த உமா பிரசாத் இரண்டு வெவ்வேறு இரண்டுகளில் 52 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம், மற்றும் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்று உள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் உமா பிரசாத்தை அடையாளம் கண்டு பிடித்தனர். மேலும், உமா பிரசாத்தை லாட்ஜில் கொண்டு சேர்த்த ஆட்டோ ஓட்டுநர் மூலம் அவரது அறையை கண்டுபிடித்த போலீசார் உமா பிரசாத் குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்து உள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் கொள்ளையில் ஈடுபட உமா பிரசாத் கேரளா வருவது குறித்து அறிந்த போலீசார், விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் கைது செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில் பொறியில் எலி சிக்கியது போல் உமா பிரசாத் கேரள போலீசார் வலையில் சிக்கிக் கொண்டார். உமா பிரசாத்தை கைது செய்த போலீசார் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 370வது சட்டப் பிரிவு ரத்து... ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு விசாரணை... உச்சநீதிமன்றம்!