ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் எல்.ஜி. நிறுவன கிடங்கிலிருந்து ட்ரக் ஒன்று திருடப்பட்டிருந்தது. அதில், தொலைக்காட்சி பெட்டி, ஏசி, வாசிங்மெஷின் என 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் இருந்துள்ளன.
இது குறித்து காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. வாகனத்தின் பாஸ்டேக் தகவல் மூலம், ட்ரக் எந்த டோல்கேட்டைத் தாண்டியுள்ளது என்பதை காவல் துறையினர் கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில், கவுரவராம் நெடுஞ்சாலையில் திருடப்பட்ட ட்ரக்கில் திடீரென டீசல் காலியானதால் திருடர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
வேறு வழியின்றி, ட்ரக்கிலிருந்த வீட்டு உபயோகப் பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்பனைசெய்ய தொடங்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரை கைதுசெய்தனர்.
தப்பியோடிய ஒருவரை, தீவிரமாகத் தேடிவருகின்றனர். விசாரணையில், எல்.ஜி. கிடங்கில் திருடிய சாதனங்களை, ஹைதராபாத்தில் விற்பனை செய்திட திருடர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: தோட்டத்தில் மேய்ந்த எருமைக் கன்றை மரத்தில் தொங்கவிட்டு கொன்ற நில உரிமையாளர்!