டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கரூர் எம்.பி., ஜோதிமணி உட்படப் பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
இதில் ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து பதிவிட்ட ஜோதிமணி; 'எத்தனை முறை எங்கள் மீது அடக்கு முறையை ஏவினாலும் மீண்டும் மீண்டும் மக்களுக்காக போராடிக்கொண்டே இருப்போம்' என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்!