கரோனா தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி(ஜூன் 1) அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மற்றும் ஆன்லைனில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தேர்வு வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து சிபிஎஸ்இ தேர்வு வாரியம் பள்ளிகளில் இருந்து மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை கடந்த 25ஆம் தேதி வரை பெற்று வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மதிப்பெண்கள் தொகுத்து அளிக்கும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நாளைக்குள் நிறைவு பெறும் என்றும், ஜூலை 30 ஆம் தேதி மாலையில் முடிவுகள் வெளியாவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சிபிஎஸ்இ பள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என சிபிஎஸ்இ தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தேர்வு தேதி அறிவிப்பு