ETV Bharat / bharat

காரை 17 கி.மீ தள்ளிச் சென்ற திருடர்கள் - சுவாரசிய பின்னணி!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் காரை திருடச் சென்ற மூன்று திருடர்களுக்கும் கார் ஓட்டத் தெரியாததால், சுமார் 17 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 24, 2023, 10:17 PM IST

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 22ஆம் தேதி இரவு, டபௌலி பகுதியிலிருந்து மாருதி கார் ஒன்று திருடப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீசார் நேற்று(மே.23) காரை திருடிய வழக்கில் மூன்று பேரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், அவர்கள் மூவரும் காரை திருடியது தொடர்பான சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் பணம் சம்பாதிக்க திட்டம்:

கார் திருட்டில் ஈடுபட்டவர்கள், பழைய கான்பூரின் ராணி காட் பகுதியைச் சேர்ந்த சத்யம் குமார், கத்ரியன் பூர்வா பகுதியைச் சேர்ந்த அமன் கௌதம், பிரம் நகரைச் சேர்ந்த அமித் வர்மா என தெரிகிறது. இதில், சத்யம் குமார், அமன் கௌதம் இருவரும் பி.டெக் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. மூன்றவாது நபரான அமித் வர்மா துப்புரவு பணி செய்பவர். இவர்கள் மூவரும் பீடா கடையில் சந்தித்துள்ளனர். பிறகு நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர். மூவரும் விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என நினைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கார் ஓட்ட தெரியவில்லை:

இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை திருடி வந்த இவர்கள் முதல் முறையாக காரை திருட முயற்சித்துள்ளனர். டபௌலி பகுதியில் காரை திருடச் சென்றபோதுதான், மூவருக்கும் கார் ஓட்டத் தெரியாது என்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மூவரும் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். அதன் பிறகு, காரை திருடி விற்றுவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி, காரை தள்ளிக் கொண்டு சுமார் 17 கிலோ மீட்டர் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு கராஜில் காரை விற்பனை செய்வதற்காக நிறுத்தியுள்ளனர். இந்த சூழலில்தான் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

பி.டெக் மாணவர்களின் ஹைடெக் சம்பவம்:

கைதான சத்யம் குமார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தாங்கள் திருடும் வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், திருடிய இருசக்கர வாகனங்களையும், பொருட்களையும் விற்பனை செய்து பணம் ஈட்டியுள்ளார். சத்யம் குமாரின் கூட்டாளி அமன் கௌதம் ஆன்லைனில் வாகனங்களை விளம்பரம் செய்யும் வேலையைப் பார்த்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சியரிடமே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்... கோவையில் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்கள்!

கைதான மூவரிடமிருந்தும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய இவர்களது மற்றொரு கூட்டாளி ரோஷனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. 18 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. உ.பி.யில் உச்சக்கட்ட கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.