புடாபெஸ்ட்: 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் இன்று (ஆகஸ்ட் 19) தொடங்குகிறது. இந்த தொடர் வரும் 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பதக்கததை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 25 வயதான இவர், 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ், 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு மற்றும் அதே ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், நீரஜ் சோப்ரா இதுவரை தங்கம் வென்றதில்லை. 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மட்டுமே வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் தொடரின் தகுதி சுற்று 25, 26 தேதிகளில் நடைபெற உள்ளது.. இந்த தொடரின் இறுதி போட்டியானது 27ம் தேதி நடைபெறுகிறது.
-
The timetable we've all been waiting for 🙌#WorldAthleticsChamps pic.twitter.com/BjbyZ054CG
— World Athletics (@WorldAthletics) August 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The timetable we've all been waiting for 🙌#WorldAthleticsChamps pic.twitter.com/BjbyZ054CG
— World Athletics (@WorldAthletics) August 18, 2023The timetable we've all been waiting for 🙌#WorldAthleticsChamps pic.twitter.com/BjbyZ054CG
— World Athletics (@WorldAthletics) August 18, 2023
இந்த முறை நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு அடுத்து ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். இவர் இந்த சீசனில் இரண்டு உயர்தர போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். அவை இரண்டிலுமே தங்கம் வென்றார். தோஹா மற்றும் லாசேன் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடருக்கு பின்னர் சுமார் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப்க்கு தயாராகி உள்ளார்.
இதையும் படிங்க: Virat Kohli: 500 கி.மீ. ஓடிய அபூர்வ நட்சத்திரம்.. 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை!
இதுபற்றி நீரஜ் சோப்ரா கூறுகையில்; “உலகின் தலை சிறந்த வீரர்களுடன் போட்டியிடுவது நிச்சயமாக சவாலானது தான். நான் கண்டிப்பாக சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த விரும்புகிறேன். அது நடந்தால் முன்பை விட நன்றாக வருவேன். நான் எப்போழுதும் எனது 100 சதவீதத்தை கொடுக்கிறேன் மற்றும் முழு கவனத்துடன் செயல்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, மனதளவில் தயாராக இருப்பது தான் மிக முக்கியமான ஒன்று. நான் அங்கு கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவேன்.
எனக்கு காயம் எற்பட்டதால், சில போட்டிகளை தவிர்த்தேன். அதன் பிறகு லாசேனில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரில் பங்கேற்றேன். அங்கு எனது செயல்திறன் நன்றாக இருந்தது. எனது செயல்திறன் மற்றும் பயிற்சியால் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், நான் விஷயங்களை படிப்படியாக எடுத்து செல்லவே விரும்புகிறேன். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. தற்போது உலக சாம்பியன்ஷிப், அதன் பிறகு டயமண்ட் லீக் இறுதி போட்டி மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தி வருகிறேன்.
அதற்கு பின்னர், ஒரு சீசன் இடைவெளி உள்ளது. மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன் 5 முதல் 6 மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவேன். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார் செய்து கொள்வது” என்றார்.
இதையும் படிங்க: Ind Vs Ire T20 : 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி... வருண பகவான் சேட்டையால் டக் வொர்த் விதியில் முடிவு!