நவக்கிரகங்களின் தலைவனான சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கக்கூடிய முதல் நாளை தமிழ்நாட்டில் தைப் பொங்கலாகவும், ஏனைய மாநிலங்களில் 'மகர சங்கராந்தி' என்ற பெயரிலும் மக்கள் கொண்டாடுகின்றனர். சூரியன் இந்த நாளில் சரியாக தென் கிழக்கில் உதிக்கக்கூடிய காலமாகும்.
அறுவடை நாளாக, மக்களிடத்தில் பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய நாளாக இந்த நாள் திகழ்வதால் விவசாயிகள், வியாபாரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக சங்கராந்தி விழாவைக் கொண்டாடவில்லை. கர்நாடகா மாநிலம், கோலார் அருகே உள்ள அரபிகோதனூர் கிராமத்தில்தான் இவ்வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏனெனில், சங்கராந்தி கொண்டாடினால், தங்களது கால்நடைகள் உயிரிழந்துவிடும் என நம்பி பல நூற்றாண்டுகளாக கொண்டாடாமல் உள்ளனர்.
முன்னதாக அங்கு சங்கராந்தியை கொண்டாடியபோது, கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அதனால் சங்கராந்தி கொண்டாடினால் கால்நடைகள் உயிரிழக்கின்றன எனக் கூறிய பெரியவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, தற்போது வரை இக்கிராமத்தில் சங்கராந்தி கொண்டாடப்படுவதே இல்லை. இதனால் வேறு சில நாள்களில் பசுவண்ணா கோயிலில் கால்நடைகளுக்குப் பூஜை வைத்து வணங்குகின்றனர்.
இதையும் படிங்க...சிருங்கேரி கோயிலுக்கு வந்த தலைமை நீதிபதி பாப்டே!