மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் அமைந்துள்ள நோபல் பல்நோக்கு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தை அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர்களுடன் நடனமாடும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் தனது பிஞ்சு கைகளால் குழந்தை காற்றோடு கதைப்பது காண்போரை மெய் மறக்கச் செய்கிறது.
கரோனா மனச்சோர்வுடன் சமூக வலைதளங்களில் உலா வரும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.