மீரட் (உத்தரப்பிரதேசம்) : உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் வசித்து வருபவர், விகாஸ் குமார் (24). இவர் ஒரு தீவிர சிவ பக்தர். இந்நிலையில், இவரது பெற்றோர் ஹரித்வார் புனிதப்பயணம் செல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளனர். ஆனால், தாய் - தந்தை இருவருக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
எனவே மகன் விகாஸ், அவர்கள் இருவரையும் துலாபாரத்தில் வைத்து தோளில் சுமந்துகொண்டு செல்லத்திட்டமிட்டு பயணத்தைத்தொடங்கியுள்ளார். இந்த துலாபாரத்தில் ஒருபுறம் தனது தாயையும், மறுபுறம் தனது தந்தையுடன் 20 லிட்டர் கேனையும் சேர்த்து சுமந்து வந்துள்ளார்.
மேலும், தன்னுடைய வலிகள் பெற்றோருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, அவர்களின் கண்களைத் துணியால் கட்டியவாறு சென்றுள்ளார்.
முன்னதாக ராமாயணத்தில் தனது பெற்றோரை சிரவணன் என்னும் நபர், தோளில் துலாபாரம் அமைத்து சுமந்ததுபோல், கதை வரும். அதில் வரும் சம்பவம்போல், விகாஸ் குமார் என்னும் இளைஞர் தனதுபெற்றோரை துலாபாரம் அமைத்து தோளில் சுமந்து வருகிறார்.
இப்படிப்பட்ட விகாஸின் அன்பு மிகுந்த செயலுக்கு ஐபிஎஸ் அலுவலர் முதல் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 கி.மீ., வரை சடலத்தை சுமந்து சென்ற குடும்பத்தார் - உதவி செய்த காவல் துறை