நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் புள்ளியியல் அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
அதில், நாட்டின் நிலவும் சமத்துவமின்மை பற்றி பதில் கூறிய அவர், "ஐக்கிய நாடுகளில் சபை வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் டாப் 10 விழுக்காடு மக்களிடம் 57 விழுக்காடு வருமானம் வருகிறது. ஐக்கிய நாடுகள் பொது சபை தனது 70ஆவது கூட்டத்தில் நீட்டித்த வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்தது.
அதில் நாடுகளில் நிலவும் சமத்துவமின்மை பிரச்னையை சீர் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயத்துள்ளது. அதை கருத்தில் கொண்டு அரசு தனது திட்டப் பணிகளை உணர்த்திவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் சாந்திஸ்ரீ