வல்சாத் (குஜராத்): உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பல்ராம் விஸ்வம்பர் ஜாய் என்பவர் 2003 ஆம் ஆண்டில் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பார்டியில் இந்தி - சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்ற தொடங்கினார். இந்நிலையில் அவரது மகள், தனது தந்தையான பல்ராம் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்று 1098 அவசர உதவி எண் மூலம், வல்சாத் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் சோனல் சோலங்கியை உள்ளடக்கிய குழுக்கள், விசாரணை செய்தது. பின்னர், தந்தை பல்ராம் மீது பார்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது மகள், மகளிர் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட பல்ராம், காவல்துறையின் விசாரணைக்கு பிறகு நவ்சாரி சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை பெற்ற இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னை நிரபராதி என பல்ராம் நிரூபித்துள்ளார்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் இழந்த கெளரவத்தை மீண்டும் பெற முடியுமா? வாழ்நாள் இழப்பு எப்போது ஈடு செய்யப்படும்? என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்து கடவுள்களின் உருவம் இருந்த காகிதத்தில் கோழிக்கறி விற்பனை - வியாபாரி கைது!