ஆக்ரா: தங்களது 40ஆவது திருமண நாளை இந்து வழிமுறைகள்படி ஓர் இத்தாலிய தம்பதி கொண்டாடிய சம்பவம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த தம்பதியினரின் திருமண நாள் கொண்டாட்டத்தையும், ‘பராட்’(baraat) எனப்படும் மணமகன் குதிரையில் ஏறி வலம் வருவதைப் பின்பற்றி இத்தாலிய மணமகன் குதிரையில் வலம் வந்ததையும் அப்பகுதி மக்கள் கண்டுகளித்தனர். தாஜ் மஹால் அருகேயுள்ள ஓர் தனியார் விடுதியில் இந்த கொண்டாட்டங்கள் நிகழ்ந்தேறின.
இந்தியக் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட கணவர் மௌரா தங்களின் 40ஆவது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட மனைவி ஸ்டெபானியாவை இந்தியாவிற்கே அழைத்து வந்துள்ளார். முதலில் தாஜ் மஹாலை பார்வையிட்ட தம்பதி இந்து மணமேடை அலங்காரங்களுடன், இந்து கலாசார முறைப்படி புரோகிதர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.