ETV Bharat / bharat

துணைநிலை ஆளுநர் தமிழிசை வரலாற்றுப் பிழை செய்துவிட்டார் - நாராயணசாமி - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வரலாற்று பிழை செய்துவிட்டார்

புதுச்சேரி: துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்துவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

cm narayanasamy
cm narayanasamy
author img

By

Published : Feb 20, 2021, 9:50 AM IST

தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பேற்று கடந்த 18ஆம் தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டார். புதுச்சேரியில் முதல் தமிழ் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஆளுநராகப் பதவியேற்ற அன்றைய நாளே புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். சமீபத்தில் நான்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில், முதலமைச்சர் நாராயணசாமிக்கு அரசியல் நெருக்கடி சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (பிப்.19) செய்தியாளர்களிடம் நாராயணசாமி, "புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வரலாற்றுப் பிழை செய்துவிட்டார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் நியமன உறுப்பினர்கள் பாஜக என்று குறிப்பிட்டுள்ளார்.

நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் ஏற்கனவே அங்கீகரிக்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது.

நியமன உறுப்பினர் விவகாரம் குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன். வரும் 21ஆம் தேதி தேதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எட்டப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இப்போது நடப்பது அரசே அல்ல; ஊழல்வாதிகளின் கோட்டை' - திமுக தலைவர் ஸ்டாலின்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.