மத்திய பிரதேசம், மாநிலம் போபாலில் உள்ளது சர்வபள்ளி ராதாகிருஷ்னா பல்கலைக்கழகம். இப்பல்கலைகழகத்தில் பனிபுரிந்த முன்னாள் துணைவேந்தர் மற்றும் தர்போதைய துனைவேந்தர் என இருவரும் போலி சான்றிதழ் வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை ஹைதராபாத்தின் சிறப்பு விசாணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் துனைவேந்தர்கள் மட்டுமல்லாமல் போலி சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட 7 ஏஜெண்டுகள், 19 மாணவர்கள் மற்றும் 6 பெற்றோரை காவல் துறை சிறப்புக் குழு கைது செய்துள்ளது.
போலீஸ் விசாரனையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஏஜெண்டுகளிடமிருந்து மாணவர்கள் குறித்த தகவலைப் பெற்று பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப விலை நிர்னயம் செய்து போலி சான்றிதழ் வழங்கியது தெரியவந்துள்ளது. போலி சன்றிதழ் பெற்ற மாணவர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் போலீசார் கூறினார்.
ஹைதராபாத் சிஐடி கூடுதல் சிபி ஏஆர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக 7 சிறப்பு விசாணைக் குழுக்கள் தற்போது நாட்டின் ஏழு மாநிலங்களில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். முன்னாள் துணைவேந்தர் குஷ்வா (2017) சர்வபள்ளி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதில் இருந்தே 2017ம் ஆண்டு முதல் இந்த போலி சான்றிதழ் விவகாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிகார் புயலில் சிக்கி 27 பேர் பலி!