ETV Bharat / bharat

90s கிட்ஸ்களின் 'காதலை வளர்த்த' பிரபல பாடகர் கேகே காலமானார்

author img

By

Published : Jun 1, 2022, 6:32 AM IST

Updated : Jun 1, 2022, 8:19 AM IST

தமிழ், இந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய பாடகர் கேகே நேற்று (மே 31) மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 53.

பிரபல பாடகர் KK மாரடைப்பால் காலமானார்!-
பிரபல பாடகர் KK மாரடைப்பால் காலமானார்!-

கொல்கத்தா: தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடிய பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) நேற்று (மே 31) கொல்கத்தாவில் உயிரிழந்தார். அங்கு இசை நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 53.

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இசை நிகழ்ச்சிக்காக சென்ற கேகே நிகழ்ச்சியில் பாடி முடிந்து, ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து, அவரது உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மின்சார கனவு டூ லெஜண்ட்: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மூலம் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட கேகே, தமிழிலும் ரகுமான் இசையிலேயே தனது முதல் பாடலை பாடியுள்ளார். 'மின்சார கனவு' திரைப்படத்தில் வரும் "ஸ்ட்ராபெர்ரி கண்ணே..." பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் கேகே.

தமிழில் 90s கிட்ஸ்களின் பல பேவரைட் பாடல்களை இவர்தான் பாடியுள்ளார். தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அதிக பாடல்களை பாடியுள்ள இவர், யுவன், ஸ்ரீகாந்த் தேவா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர்களின் இசையமைப்பிலும் பாடல்களை பாடியுள்ளார். இவர் தற்போது, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள 'லெஜண்ட்' படத்தில் ஹாரிஸின் இசையில் 'கொஞ்சி கொஞ்சி' எனத் தொடங்கும் பாடியுள்ளார். தமிழில் இதுதான் அவரது கடைசி பாடலாகும்.

தமிழில் தவிர்க்கமுடியாத பாடல்களை தந்தவர்: இவர் யுவனின் இசையில் "காதல் வளர்த்தேன்" (மன்மதன்) பாடல் ரசிகர்களின் மனதில் இன்னும் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இன்னிசை மட்டுமில்லாமல் துள்ளல் இசையிலும் இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.

ஜெயம் ரவியின் 'தாஸ்' படத்தில் வரும் "சக்க போடு போட்டாளே" பாடலும், அந்நியன் படத்தில், ‘அண்டங்காக்க கொண்டக்காரி’ என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அனைவரையும் ஆடவைத்த விஜய்யின் ‘அப்படி போடு’ முதல் அஜித்தின் ‘ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி’ வரை முன்னனி நட்சத்திரங்களுக்கும் இவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளது.

அத்தனை ஜானர்களிலும் அதிகமான ஹிட் பாடல்களை கொடுத்த கேகேவின் மறைவு, இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த கேகேவின் பாடலில் உச்சரிப்பு அனைத்தும் அவ்வளவு தெளிவாக இருக்கும். இந்தியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், மற்ற மொழி ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார். இசைக்கு எதுவும் தேவையில்லை, இசை மட்டுமே போதும். பல பாடல்களை பாடிய கேகேவிற்கு ஈடிவி பாரத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Last Updated : Jun 1, 2022, 8:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.