கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் தொற்றுநோயைத் தடுக்கும் நோக்கிலும் திரையரங்களில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று (ஜன. 09) நடைபெற்ற 26ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் பங்கேற்ற மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உள்ள திரையரங்களில் இனி 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இருப்பினும், பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், தூய்மைப் பணியாளர்கள் கட்டாயமாக சுகாதாரப் பணியில் பணியமர்த்த வேண்டும் என்றும், ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் திரையரங்கம் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.
26ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.