ETV Bharat / bharat

என்னது பிரியாணி இல்லையா? கல்யாணத்த நிறுத்துடா.. பிரியாணியால் தடைபட்ட திருமணம்!

தெலங்கானா மாநிலத்தில் மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு கல்யாணத்தில் பிரியாணி வழங்கப்படாததால் சண்டை ஏற்பட்டு திருமணம் நின்றுபோன சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharatஇலைல பிரியாணி இல்லையா! நிறுத்துடா கல்யாணத்த ! - பிரியாணியால்  தடைபட்ட திருமணம்

author img

By

Published : Nov 29, 2022, 8:04 PM IST

ஷாபூநகர்: வரதட்சணையால் பல திருமணங்கள் நின்றிருக்கின்றன. ஏன் காதல் விவகாரங்களால் கூட சில திருமணங்கள் நின்றிருக்கின்றன. ஆனால் தெலங்கானாவில் பிரியாணிக்காக ஒரு திருமண நிகழ்வு தடைபட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஷாபூநகரில் நேற்று (நவ.28) நடக்க இருந்த திருமணம் ஒன்று பிரியாணி கிடைக்காததால் தடைபட்டுள்ளது.

ஜகத்கிரிகுட்டா ரிங்பஸ்தியைச் சேர்ந்த மணமகனுக்கும், குத்புல்லாபூரைச் சேர்ந்த மணமகளுக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதனையொட்டி நேற்று முன் தினம் (நவ.27) இரவு ஷாபூர்நகரில் உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த சடங்குகளை அடுத்து விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகள் பீகாரைச் சேர்ந்த மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டது.

சடங்குகள் முடிந்து விருந்து சாப்பிட வந்த மணமகனின் நண்பர்கள் பிரியாணி ஏன் போடவில்லை என தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு முற்றி இருதரப்பினரிடையே கைகலப்பானது. இதனையடுத்து நேற்று நடக்க இருந்த திருமணத்தை மாப்பிள்ளை வீட்டார் நிறுத்தினர். பின்னர் காவல்துறை ஆய்வாளர் பவன் திருமண வீட்டாரை அழைத்து சமாதனம் செய்ததையடுத்து நாளை (நவ.30) திருமணம் நடத்த முடிவு செய்தனர். இருப்பினும் பிரியாணிக்காக திருமணம் தடைப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தெலங்கனா முதல்வர் வீடு முற்றுகை: ஆந்திர முதல்வரின் சகோதரி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.