ETV Bharat / bharat

Online Gaming; ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறையை வெளியிட்டது மத்திய அரசு - The central Govt has released draft

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பந்தயத்தில் ஈடுபட அனுமதிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில்(Central Govt Draft regulations to regulate online games), இதுகுறித்து வரும் ஜன.17ஆம் தேதிக்குள் கருத்துகளை பொதுமக்களும் உரிய நிறுவனங்களும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 2, 2023, 11:05 PM IST

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டுகள் மீதான மோகமும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதே வேகத்தில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதன் விளைவாக அவ்வப்போது தற்கொலைகளிலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமான ஆன்லைன் தொடர்பான குற்றங்களும் பிரச்னைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இவற்றை முறைப்படுத்த வேண்டும், இவற்றிற்காக விதிகளை வகுக்க வேண்டும் என்ற தேவை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே இருந்தது.

இதனிடையே இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இதற்கு தீர்மானமும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு இவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான ஒரு வரைவு விதிமுறைகளை (Central Govt Draft regulations to regulate online games) இன்று (ஜன.2) வெளியிட்டுள்ளது.

  • ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • ஆன்லைன் விளையாட்டு குறித்து உருவாகும் புகார்கள், குறைதீர்க்கும் முறையில் சரி செய்ய வேண்டும்.
  • இந்திய சட்டவிதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுகள் நடைபெற வேண்டும்.
  • விளையாடுவதற்கு தகுதியான வயது குறித்து சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

இந்த வரைவு விதிமுறைகள் மீது, பொதுமக்கள் மற்றும் உரிய அமைப்பினர் வரும் ஜனவரி 17ம் தேதிக்குள் கருத்துகளை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துகளுக்கு பின்னர் வரும் பிப்ரிவரி மாத இறுதிக்குள்ளாக இந்த விதிகள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரிக்கை - சரத்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.