புதுச்சேரி: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (ஏப்.1) புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பல மாநிலங்களில் பாஜக ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸ் அரசை கவிழ்த்தது.
எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற நோக்கில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் செயல்பட்டு வருகின்றனர். பாஜக பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களைத் தவிக்க வைத்துள்ளது. புதுச்சேரி மக்கள் எப்போதும் காங்கிரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதால் இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பார்கள், பாஜகவினர் விஷம் போன்றவர்கள் அவர்களைப் புதுச்சேரியில் ஆட்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது” என்றார். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உடனிருந்தார்.
இதையும் படிங்க: டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் வே பயன்பாட்டிற்கு வந்தது