காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் தனது தொகுதியில் நடைபெற்ற கட்சி விழாவில் நேற்று பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "கட்சியினர் அனைவரும் சோனியா காந்தியின் தலைமையை விரும்பித்தான் பணியாற்றுகிறோம். ஆனால் இது தற்காலிக நிலைதான். கடந்த இரண்டு வருடங்களாக கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு புத்துணர்ச்சி தேவை. எனவே, கட்சியின் நிரந்தரத் தலைவர் விரைவில் தேர்வு செய்யப்பட வேண்டும். ராகுல் காந்தியின் தலைமையில் புதிய தலைமை விரைவில் உருவெடுக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.
2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகியதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டுவருகிறார்.
இதையடுத்து கடந்த ஓராண்டாகவே கட்சிக்கு நிரந்தரத் தலைமை வேண்டும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நான் அவமானப்படுத்தப்பட்டேன் - பதவியை ராஜினாமா செய்த அமரிந்தர் சிங் வேதனை