ETV Bharat / bharat

நன்றி தமிழ்நாடு!...பிரதமர் மோடி நெகிழ்ச்சி ட்வீட் - welcomemodi

தமிழ்நாட்டிற்கு வந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்

நன்றி தமிழ்நாடு
நன்றி தமிழ்நாடு
author img

By

Published : May 27, 2022, 1:38 PM IST

சென்னை தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்தார். பிறகு அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டரங்கிற்கு வந்த பிரதமருக்கு வழி நெடுகிலும் மேள தாளத்துடன் மக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டப் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், நன்றி தமிழ்நாடு! நேற்றைய பயணம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என ட்வீட் செய்துள்ளார். மேலும் தனது பயணத்தின் முக்கிய அம்சங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ. 31,530 கோடி மதிப்புள்ள செயல் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.