மும்பை: அண்ணல் அம்பேத்கரின் 130ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
மும்பை சைத்ய பூமியில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் உத்தவ் தாக்கரே மலரஞ்சலி செலுத்தினார். கரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சைத்ய பூமியில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்த குவிந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் 5 பேருக்கு மேல் எங்கும் கூடக் கூடாது, கரோனா வைரஸுக்கு எதிரான போர் நடைபெற்றுவருகின்றது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட அவசர சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.