கோட்டயம் (கேரளா): கேரளா மாநிலம் கோட்டயத்தில் பரிப் ஸ்ரீ புரம் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சேர்தலையைச் சேர்ந்த ஷிரிஷ் (33) என்பவர் பூசாரியாக உள்ளார்.
சிறுமி, அவரது பெற்றோர் ஜாதகம் பார்ப்பதற்காகக் கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது பூசாரி ஷிரிஷ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், குழந்தைகள் நலக் குழு, குமரகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் காவல் துறையினர் ஷிரிஷை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: துப்பாக்கிச் சுடும் மையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு அமைப்பு