உத்தரப் பிரதேசத்தில் உள்ள இஸ்லாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமத்தில் இன்று(பிப்.6) காலை 7 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க கோயில் பூசாரி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த, விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஜெய்பால் சிங்(50) என்பதும், இவரை ராம்வீர் சிங் (25) என்பவர் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கிராம தலைவர் மனிஷ்குமார் கூறுகையில், “குற்றஞ்சாட்டப்பட்ட ராம்வீர் சிங் (25) போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்; அவரது மனைவி அவரை விட்டு சென்றதால் கவலையில் இருந்த அவர் பூசாரியை தாக்கியிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ராம்வீர் சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.இதையும் படிங்க: மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை காட்டி மிரட்டிய மின்சார வாரிய ஊழியர் கைது!