டெல்லியில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. சில சமயங்களில் வெப்பநிலை மைனஸூக்கு கீழ் சென்று, மக்களை குளிரில் உறைய வைக்கிறது.
இந்நிலையில், இமயமலை மலைகளில் வீசும் குளிர் காற்று காரணமாக, வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸூக்கு கீழ் குறைந்து டெல்லியில் கடும் குளிர் அலை வீசி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபடியான மூடுபனி காரணமாக, பாதைகளை மறைத்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடந்த திங்கள்கிழமை (ஜன.11) வெப்பநிலை சீராக இருந்துவந்த நிலையில், இமயமலையில் வீசும் காற்று காரணமாக, மீண்டும் வெப்பநிலை குறைய தொடங்கியுள்ளது.
டெல்லி நகரின் குறைந்தபட்சம் வெப்பநிலை நேற்று (ஜன.13) 4.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.