ETV Bharat / bharat

இணையவழி தமிழ் கற்பித்தல்: தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் முயற்சி

பணிகள் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் குடியிருந்து வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு இணையம் வழியாக தமிழ் கற்பிக்கும் புதிய முயற்சியை முன்னெடுத்து வருகிறது தெலங்கானா தமிழ்ச் சங்கம்.

இணையவழி தமிழ் கற்பித்தல்
இணையவழி தமிழ் கற்பித்தல்
author img

By

Published : Aug 10, 2021, 10:40 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் இணையம் வழியாக தமிழ் கற்பித்தல் வகுப்புகள் நடைபெறுகின்றன.

பணிகள் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து தெலங்கானா மாநிலத்தில் குடியேறி வசித்து வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நோக்கத்தில், இணையவழி கற்பிக்கும் முயற்சியை தெலங்கானா தமிழ்ச் சங்கம் எடுத்துள்ளது. இதற்காக இணையம் வழியாக தமிழ் வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியை கற்க பலரும் விருப்பம் தெரிவித்து, ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இந்த இணையவழி தமிழ் கற்பித்தல் வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்வு கடந்த மாதம் 15ஆம் தேதி, கூகுள் மீட் செயலி மூலமாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தெலங்கானா தமிழ்ச் சங்க தலைவர் போஸ் வரவேற்று பேசினார். ஹைதராபாத் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பயிற்சி மையம், சித்தாந்த வித்யா நிதி பேராசிரியர் கோ. முத்துசுவாமி, (கவிஞர் சின்மய சுந்தரன்), ஹைதராபாத் நிறை இலக்கிய வட்ட பட்டிமன்ற தலைவர் ஸ்ரீனிவாசன், திருவையாறு ஔவை கோட்டம் மற்றும் தமிழ் ஐயா கல்வி கழக தலைவர் முனைவர் கலைவேந்தன், கோவை வசந்த வாசல் கவிமன்ற செயலாளர் கோகுலன், அகமதாபாத் தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் வாலறிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தெலங்கானா தமிழ்ச் சங்க தமிழ் வகுப்பு ஆசிரியர், பேச்சாளர் ஜெய மணிகண்டன் ஏற்புரை ஆற்றினார். தமிழ்ச் சங்க உறுப்பினர் யுவராஜ் நன்றி உரையாற்றினார்.

இந்த இணையவழித்தமிழ் வகுப்புகள் குறித்து தெலங்கான தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த இணைப் பொதுச் செயலாளர் ராஜ்குமார் கூறுகையில், "இரண்டு தெலுங்க பேசும் மாணவர்கள் உள்பட பலர் இந்த தமிழ் வகுப்பில் பங்கேற்க விருப்பம் தெரிவிச்சிருந்தாங்க. ஏற்கனவே குழந்தைகளுக்கு வழக்கமான வகுப்புகள் இருக்கிறதால, மாலை 4 மணி முதல் 5.30 வரை, திங்கள் தொடங்கி வெள்ளி வரை வாரத்தின் 5 நாள்கள் வகுப்புகள் ஏற்படு செய்திருந்தோம்.

தமிழ்  எழுத்து பயிற்சி

மாணவர்களுக்கு தமிழ் எழுத்துகளைக்களை எப்படி அடையாளம் காண்பது, எழுதுவது, உச்சரிப்பது என்று அடிப்படையில் இருந்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நினைத்தை விட மாணவர்கள் வேகமாவும், விருப்பமாகவும் வகுப்புகளில் பங்கேற்று தமிழ் மொழியைக் கற்று வருகின்றனர்.

தற்போது 25க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வரும் இந்த வகுப்புகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: கடல் பாதுகாக்க வேண்டிய பாரம்பரிய பொக்கிஷம் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.