ETV Bharat / bharat

தெலங்கானா தமிழ்ச்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

author img

By

Published : Aug 14, 2021, 4:46 PM IST

தெலங்கானா தமிழ்ச்சங்கம் சார்பில் நாளை மாலை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது.

telangana-tamil-sangam-conducted-program-on-independence-day
தெலங்கானா தமிழ்ச்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஹைதராபாத்: தெலங்கானா தமிழ்ச்சங்கம் சார்பில் நாளை, சுதந்திர தின சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்வில், தமிழ் வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சுதந்திர தின உரை, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த மகளிருக்கு விருது வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

மேலும், தமிழ் வகுப்புகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ்ப்புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஹைதராபாத் குக்கட்பள்ளியில் உள்ள சென்னை சில்க்ஸ் விழா அரங்கில் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு தகுந்த இடைவெளியுடன் இந்நிகழ்வு நாளை மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.

பணிகள் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து தெலங்கானா மாநிலத்தில் குடியேறி வசித்து வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நோக்கத்தில் பல்வேறு முன்முயற்சிகளை தெலங்கானா தமிழ்ச்சங்கம் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இணையவழி தமிழ் கற்பித்தல்: தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.