ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் “எனது 17 வயதான தங்கை வீட்டில் நீண்ட நேரமாக போன் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த எனது வளர்ப்புத்தந்தை, அவளை கண்டித்தார். அதுமட்டுமல்லாமல் கண்மூடித்தனமாக அடித்தார்.
இதானால் படுகாயமடைந்த எனது தங்கையை நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகவே, எனது தங்கையை கொலை செய்த வளர்ப்புத்தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வளர்ப்புத்தந்தையை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவனர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது