ETV Bharat / bharat

நாட்டில் ஆட்டிறைச்சி நுகர்வில் தெலங்கானா முதலிடம்! - செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம்

தெலங்கானா மாநிலத்தில் ஆட்டிறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளது. ஆட்டிறைச்சி உற்பத்தி, விற்பனை, நுகர்வு என அனைத்திலும் தெலங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

Meat l
Meat l
author img

By

Published : Nov 28, 2022, 1:26 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இறைச்சி நுகர்வு வெகுவாக அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை அசைவ உணவை சாப்பிடும் வகையில் உணவுப் பழக்கம் மாறி வருகிறது. ஆட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால், ஒரு கிலோ ஆட்டிறைச்சியின் விலை 800 ரூபாயிலிருந்து 1,080 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே தெலுங்கானாவில்தான் இறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என தெரிகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலத்தில் 9.75 லட்சம் டன் செம்மறியாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை சராசரியாக ஒரு கிலோ 600 ரூபாய் என கணக்கிட்டால் 58,500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது ஒரு கிலோ செம்மறியாட்டு இறைச்சி 600 ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், தெலங்கானாவில் சில்லறை சந்தைகளில் 1000 ரூபாய் வரை விற்கப்படுவதாக இந்திய தேசிய இறைச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தெலுங்கானாவில் இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால் தினமும் 80 முதல் 100 லாரிகளில் செம்மறி ஆடுகள் தெலுங்கானாவுக்கு வருகின்றன. தெலுங்கானா மாநில செம்மறி மற்றும் வெள்ளாடு மேம்பாட்டு சங்கம், செம்மறி ஆடு வளர்ப்பு, அவற்றின் விற்பனை, மாநிலத்தில் அதிகரித்து வரும் இறைச்சிக்கான தேவை குறித்து ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வறிக்கையில், "தெலுங்கானாவில் 2015-16ல் செம்மறியாட்டு இறைச்சி உற்பத்தி 1.35 லட்சம் டன்னாக இருந்தது. இது 2020-21ல் 3.03 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 3.50 லட்சம் டன்னுக்கு மேல் விற்பனையாகும் என்றும், இதற்கு மக்கள் 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடுவார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த இறைச்சி விற்பனை மதிப்பு 35 ஆயிரம் கோடியை எட்டக்கூடும்.

நாட்டில் ஆண்டுக்கு தனிநபரின் ஆட்டிறைச்சி நுகர்வு 5.4 கிலோ மட்டுமே, ஆனால் தெலுங்கானாவில் 21.17 கிலோவை எட்டியுள்ளது. ஆடுகள் வழங்கும் திட்டம் மூலம் 7,920 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து 82.74 லட்சம் செம்மறியாடுகள் வாங்கி விநியோகிக்கப்பட்டது. அதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் டன் இறைச்சி உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் தெலங்கானாவிலிருந்து செம்மறியாடுகளை வாங்கிச் செல்கின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் இரண்டாம் கட்டமாக 6,125 கோடி ரூபாய் செலவில், 3.50 லட்சம் பேருக்கு, 73.50 லட்சம் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்துக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தரமான இறைச்சியை மக்களுக்கு விற்பனை செய்ய, நேரடி விற்பனை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எலியின் மரணத்திற்கு நீதி வேண்டும்.. விலங்கு நல பிரியர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.