ETV Bharat / bharat

'தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு' - ஆளுநர் தமிழிசை பகீர் புகார்!

author img

By

Published : Nov 9, 2022, 8:08 PM IST

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு' - ஆளுநர் தமிழிசை பகீர் புகார்!.

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக அம்மாநில அரசின் விவகாரங்களில் ஆளுநர் தலையிடக் கூடாது என முதலமைச்சர் வெளிப்படையாகவே பேசி வருகிறார்.

பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ள சந்திரசேகர் ராவ், ஆளுநர் இடையேயான சண்டை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், 'தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், முன்னாள் உதவியாளர் துஷார், தீபாவளி வாழ்த்து கூறியதில் இருந்து தனது அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என்று பகீர் புகார் கூறியுள்ளார்.

மேலும், தெலங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்றும்; ஜனநாயகமற்ற சூழல் நிலவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: சாதி மாறி காதலித்த மகளை ஆணவக்கொலை செய்த தந்தை கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.