தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கடந்த 19ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனையடுத்து அவருக்குப் புதன்கிழமை (ஏப்ரல் 28) ரேபிட் ஆன்டிஜென், ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ரேபிட் ஆன்டிஜென் சோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவில் இவருக்கு பாசிட்டிவா?... நெகடிவா? என்பது தெளிவாக தெரியவில்லை.
இதுகுறித்து மருத்துவர் எம்.வி. ராவ் கூறுகையில், "சில நேரங்களில், வைரஸின் தீவிரம் குறைந்து வருவதால் முடிவுகள் துல்லியமாக இருக்காது. முதலமைச்சர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். மீண்டும் இவருக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை இரண்டு அல்லது மூன்று நாள்களில் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.