தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவிற்கு கடந்த 19ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. லேசான அறிகுறிகள் இருந்ததால் அவரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.
சந்திரசேகர் ராவிற்கு நேற்று (ஏப்ரல் 28) ரேபிட் ஆன்டிஜென், ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரேபிட் ஆன்டிஜென் சோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு வந்த நிலையில், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவு இன்று (ஏப்ரல் 29) வெளியாகிறது.
முன்னதாக தெலங்கானா மாநிலத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், முதலமைச்சர் கே.சி.ஆரின் மகனுமான கே.டி.ஆருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.