ETV Bharat / bharat

புதிய தேசிய கட்சியை தொடங்குகிறார் சந்திரசேகர ராவ் - குடியரசு தலைவர் தேர்தல்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BRS
BRS
author img

By

Published : Jun 12, 2022, 1:58 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்று (ஜூன் 11) குடியரசு தலைவர் தேர்தல், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் உள்ளிட்டவை குறித்து உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை தொடங்கவுள்ளதாகவும், இதுகுறித்து வரும் 19ஆம் தேதி நடைபெறும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், "பாஜகவின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சியான காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், மாற்று அரசியல் சக்திக்காக நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர். நாம் தொடங்கும் இந்த புதிய கட்சி அந்த மாற்று சக்தியாக இருக்கும். இதற்காக நாம் இந்த குடியரசு தலைவர் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து, பாஜவுக்கு பாடம் புகட்ட இதுவே சரியான தருணம். இந்த செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாக, தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறோம். ஒத்த கொள்கைகள் உள்ள கட்சிகளை இணைத்து வியூகம் அமைப்போம்" என்று கூறியுள்ளார்.

புதிய கட்சியின் பெயர் விரைவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும் என்றும், இம்மாத இறுதிக்குள் புதிய கட்சி தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்திரசேகர ராவின் இந்த புதிய கட்சிக்கு கார் சின்னம் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அரங்கனை தரிசிக்க வந்த எல். முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.