ETV Bharat / bharat

அம்மா.. எனக்காக ஒரு 4 நாள்கள் அழுவீயா? வகுப்பறையில் மாணவர் தற்கொலை!

பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வகுப்பறையில் 17 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kalaburagi suicide kalaburagi boy suicide in classroom Teenager kills self in classroom வகுப்பறையில் மாணவர் தற்கொலை மாணவர் தற்கொலை தற்கொலை அம்மா மாணவனின் கலபுர்கி ஷேக் உமர் வகுப்பறையில் தற்கொலை குறிப்பு

author img

By

Published : Apr 11, 2021, 3:07 AM IST

கலபுர்கி: கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் மதினா காலனியில் உள்ள ஆயிஷா ஆங்கிலப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தவர் ஷேக் உமர். இவர் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளி வகுப்பறையில் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக தன் கைப்பட பள்ளி கரும் பலகையில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில், “அம்மா. நான் தற்போது சாகப் போகிறேன். நீங்கள் மகிழ்வாக உணர்வீர்கள். என் சாவை எண்ணி ஒரு நான்கு நாள்கள் அழுவீர்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் சாவுக்கான காரணம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், பெற்றோருடன் கோபித்துக் கொண்டதே மாணவனின் தற்கொலைக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.