உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபீர் நகர் மாவட்டத்தில் ராம்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள 18 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் காதலித்து வந்த நிலையில், இருவரும் அதே கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று (செப் 19) மாலை தூக்கில் நிலையில் காணப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற சான்ட் கபீர் நகர் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து மொபைல் போன்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதேநேரம் இது கொலை என இருவரது குடும்பத்தாரும் தெரிவித்து வரும் நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு லக்கிம்பூர் மாவட்டத்தில் இரு சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டு, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உத்தரபிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள் - விசாரணை காவலில் நால்வர்