ETV Bharat / bharat

தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சி தூண்களாகும் - பிரதமர் மோடி

author img

By

Published : Oct 12, 2022, 1:56 PM IST

தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முக்கிய இரண்டு தூண்களாகும் என்று உலக புவிசார் சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சி  தூண்களாகும்

டெல்லி: ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக். 11) காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், "தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முக்கிய இரண்டு தூண்களாகும். தொழில்நுட்பம் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. தொழில்நுட்பம் என்பது யாரையும் விலக்கி வைப்பதல்ல, எல்லோரையும் சேர்ப்பதாகும். ஸ்வமிதா மற்றும் வீட்டுவசதி போன்ற திட்டங்களில் தொழில்நுட்பத்தின் பங்கு, சொத்து உரிமை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், புவிசார் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது.

புவிசார் தொழில்நுட்பத்தின் பலன்களைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா ஏற்கனவே ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் தகவல் தொடர்புக்கு வசதியாக தெற்காசிய செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் 2ஆவது தூணாக திறமை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மிகச்சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.

2021ஆம் ஆண்டிலிருந்து யூனிகார்ன் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இளம் திறமைக்கு ஒரு சான்றாகும். புவியியல் தரவுகளின் சேகரிப்பு, உருவாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இப்போது ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளன. ட்ரோன் துறைக்கு ஊக்கமளித்தல், விண்வெளித்துறையில் தனியார் பங்கேற்பு, இந்தியாவில் 5ஜி சேவை துவக்கம் ஆகியவை இத்தகைய சீர்திருத்தங்களாகும்" என்றார்.

இதையும் படிங்க: அடுத்தாண்டு டிசம்பரில் ராமர் கோயில் திறக்கப்படும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.