டெல்லி: கனடா செய்தி தொடர்பாளர் முகமது ஹுசைன் கூறும் போது, G20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த கனடா பிரதமர் விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியானது நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குழுவினர் இன்று (செப்.12) பிற்பகல் புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மகன் சேவியர் மற்றும் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.8) தலைநகர் டெல்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். இந்த நிலையில் G20 மாநாடு முடிந்து ஞாயிற்றுக்கிழமை கனடா பிரதமர், அவரது மகன் மற்றும் குழுவினர் விமானம் மூலம் கனடா புறப்படவிருந்தனர். இந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.. இதனையடுத்து, கனடா பிரதமர் டெல்லியில் தங்கியிருந்து தனது பணிகளை மேற்கொண்டு இருந்தார் என தெரிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க: டிஜிட்டல் கட்டமைப்பில் ஜி20 நாடுகளுக்கிடையே கருத்தொற்றுமை - இந்தியாவிற்கு பில்கேட்ஸ் பாராட்டு!
கனடா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள அறிவிப்பில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அழைத்து செல்ல மாற்று விமானம் இங்கிலாந்திற்கு செவ்வாய்க்கிழமை (செப்.12) அதிகாலை வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கி தனது பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராயல் கனடியன் விமானப்படை சிசி-150 போலரிஸ் விமானத்தை இந்தியாவிற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தன.
கனடா தேசிய பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பில், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு விவகாரம் சரிசெய்யப்படும் மேலும் அனைவரின் பாதுகாப்புகளும் மிக முக்கியமான ஒன்று விமானத்தின் முந்தைய நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது என தெரிவித்துள்ளன.
கனடா செய்திக்குறிப்பின் படி, விமானத்தின் சோதனையின் போது விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற தொழில்நுட்ப கோளாறு முதன் முறை அல்ல. எனவும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் 2016 அக்டோபரில் விமானம் புறப்பட்டு 30 நிமிடங்களில் விமானத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஒட்டாவாவுக்கு திரும்ப வேண்டியிருந்ததாகவும், 2019ல் விமானம் ஹேங்கரில் இழுத்து செல்லும் போது சுவரில் மோதி விமானத்தின் இன்ஜினில் சேதம் அடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு இருந்தன.
மேலும் தற்போது, விமானம் சரி செய்யப்பட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குழுவினர் இன்று (செப்.12) பிற்பகல் புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டீசல் வாகனங்களுக்கு 10சதவீதம் ஜிஎஸ்டி வரி உயர்வு? - நிதி கட்காரி கூறுவது என்ன?