டெல்லி : ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றப்பட்டுள்ள விவகாரம் ஏன் எனக் கேள்வியெழுப்பிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர், “மோடி அரசாங்கம் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ராஜிவ் காந்தி நாட்டின் பிரதமராக இருந்தவர். விளையாட்டு வீரர்களுடன் உணர்வுப்பூர்வமான உறவு கொண்டிருந்தார். அவரின் பங்களிப்பை நாடு ஒருபோது மறவாது” என்றார்.
தொடர்ந்து, ராஜிவ் காந்தி கேல் ரத்னா, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதாக மாற்றப்பட்டது குறித்து பேசுகையில், “மோடி அரசாங்கம் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என மாற்றியிருப்பதற்கு பதிலாக புதிய விருது ஒன்றை அறிவித்திருக்க வேண்டும்.
மோடி அரசாங்கம் பள்ளிகள், கல்லூரிகள் என ஒவ்வொன்றாக பெயரை மாற்றியது. தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் விருதை பெயர் மாற்றியுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி அணியின் விளையாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் மோடி அரசின் செயல் துரதிருஷ்டவசமானது” என்றார்.
-
I have been getting many requests from citizens across India to name the Khel Ratna Award after Major Dhyan Chand. I thank them for their views.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Respecting their sentiment, the Khel Ratna Award will hereby be called the Major Dhyan Chand Khel Ratna Award!
Jai Hind! pic.twitter.com/zbStlMNHdq
">I have been getting many requests from citizens across India to name the Khel Ratna Award after Major Dhyan Chand. I thank them for their views.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
Respecting their sentiment, the Khel Ratna Award will hereby be called the Major Dhyan Chand Khel Ratna Award!
Jai Hind! pic.twitter.com/zbStlMNHdqI have been getting many requests from citizens across India to name the Khel Ratna Award after Major Dhyan Chand. I thank them for their views.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
Respecting their sentiment, the Khel Ratna Award will hereby be called the Major Dhyan Chand Khel Ratna Award!
Jai Hind! pic.twitter.com/zbStlMNHdq
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என பெயர் மாற்றம் செய்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - விளையாட்டு வீரர்கள் வரவேற்பு